வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி முறை அல்லது QR முறைமையின் படி எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
QR முறைக்கு பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்களுக்கு வருமான உரிமத்தைப் பயன்படுத்தி பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எரிபொருள் கோட்டாவை தேவையற்ற போக்குவரத்து இன்றி பெற்றுக் கொள்வதற்கு ஒரு வார கால அவகாசம் உள்ளது.
அதனை QR அமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.