ம்மாந்துறை பகுதியில் மனித நுகர்விற்கு முறையாக தயாரிக்கப்படாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவக உரிமையாளர்கள் மற்றும் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு ரூ.70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆலோசனைக்கு அமைவாக, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.சோதனைக்குள் பலசரக்கு கடைகள், ஹோட்டல்கள், துரித உணவுக் கடைகள், ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையங்கள் அடங்கும்.சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.உணவக உரிமையாளர்களுக்கு தலா ரூ.25,000, 15,000, 20,000, 10,000 என மொத்தம் ரூ.70,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஐஸ்கிரீம் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும், முறையாக சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் நிறுவனங்களை மூடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
உணவுப் பொருட்களின் தரத்தினைப் பேணுதல் சுகாதாரத்திற்கும் பொது மக்களின் பாதுகாப்பிற்கும் அவசியமானது என்பதால், மட்டக்களப்பு மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.