சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) புதிய தலைவராக சிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சருமான கிறிஸ்டி கவன்ட்ரி (Kirsty Coventry) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
12 ஆண்டுகள் தலைவராக இருந்த தோமஸ் பேச் பதவி விலகவுள்ள நிலையில், 7 பேர் போட்டியிட்ட குறித்த பதவிக்கான தேர்தலில் கிறிஸ்டி கவன்ட்ரி வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
97 உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 49 வாக்குகளைப் பெற்று கிறிஸ்டி கவன்ட்ரி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.