பரிசில் €500,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப்பானம் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை பெப்ரவரி 12 ஆம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 ஆம் வட்டரத்தில் உள்ள பழங்கால பொருகள் சேமிப்பகம் ஒன்றிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பழங்கால பொருகள், நகைகள் ரொக்கப்பணம் போன்றவை திருடப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு €500.000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.