அனுராதபுரம் – குருநாகல் பாதையில் நடந்த பயங்கர கார் விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவர்களில் இரு பிள்ளைகள் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்த டொன் அஜித் பிரியந்த , பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சாரதி ஆவார்.
கடந்த 13ம் திகதி காலை இடம்பெற்ற இந்த விபத்தில் கொச்சிவத்தை, வெலிவேரியவை சேர்ந்த டொன் அஜித் பிரியந்த ,அவரது மனைவி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
வாகனத்தில் பயணித்த இந்த தம்பதியரின் இரு குழந்தைகளில் மகன் பலத்த காயங்களுடன் தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகள் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பத்தினர் பயணித்த வாகனம் குருநாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, சாரதிக்கு தூக்கம் வந்ததால் கெத்தப்பஹுவ, கும்புக் சிசில ஹோட்டல் அருகே பாதையின் இடது பக்கமாக விலகி மரத்தில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலும் விபத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.