பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி காலை கத்திக்குத்து காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும், சிறைச்சாலை உள்ளக விசாரணைகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து விசாரணைகளையும் விரைவாக முடித்து, சம்பந்தப்பட்ட குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.