மலேசியாவின் ஷா ஆலம், தாமான் ஆலம் இந்தா பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் மின்சாரம் தாக்கியதால், இலங்கையரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் மற்றும் அவரது நாய் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை தெரிவித்ததாவது, மின்சாரம் துண்டிக்கப்படும் வரை உடலை மீட்க முடியவில்லை எனவும், உயிரிழந்த இளைஞரின் உடலில் எந்த வெளிப்படையான காயங்களும் காணப்படவில்லை என்றும் தெரிவித்தது. உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு வேலைக்காக சென்ற இளம் இலங்கை இளைஞரின் சோகமிகு முடிவானது இந்த சம்பவம் மூலம் தெரியவந்துள்ளது.