பெரும்பாலான பெண்கள் மேக்கப் போடாமல் வெளியில் செல்ல மாட்டார்கள்.
நாம் எவ்வளவு அழகாக மேக்கப் செய்தாலும் நமது முகத்தை எடுத்து காட்டுவது Lipstick தான்.
நீங்கள் மேக்கப் செய்து விட்டதும் மேக்கப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் லிப்ஸ்டிக் நிறம் பயன்படுத்த கூடாது, அப்படி பயன்படுத்தினால் அது உங்களின் அழகை இழக்க செய்யும்.
இதற்காக தான் இந்த பதிவில் எந்த வகையாக லிப்ஸ்டிக் உங்களின் சரும நிறத்திற்கு பொருந்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சரும நிறம்
உங்கள் சரும நிறம் ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது. அவை தான் பால் நிற வெள்ளை சருமம், வெள்ளை சருமம், நடுத்தர நிற சருமம், பழுப்பு நிற சருமம் மற்றும் கருமை நிற சருமம் ஆகும்.
1.பால் வெள்ளை நிற சருமம் கொண்டவர்கள் பிங்க், கோரல், பீச், நியூடூ மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால் உங்களின் அழகை இது இரண்டு மடங்காக மெருகூட்டும்.
2.நடுத்தர நிறத்தை கொண்ட சருமத்தை உடையவர்கள் ரோஸ், பெர்ரி, செர்ரி சிவப்பு, மற்றும் மெவ் நிறங்களில் இருக்கும் லிப்ஸ்டிக்கை பயன்படத்தினால் பார்பதற்கு மிகவும் அழகாக தெரிவீர்கள்.
3.பழுப்பு நிற சருமம் கொண்டவர்கள் நீங்கள் உங்களுக்கு கோரல், டீப் பிங்க், பிரைட் ரெட் போன்ற நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால் நீங்கள் அழகாக காட்சியளிப்பீர்கள்.
4.கருப்பு நிற சருமம் கொண்டவர்கள் பிளம், கேரமல், ஒயின் போன்ற நிறங்களை பயன்படுத்த வேண்டும். இது உங்களின் அழகை மேம்படுத்தும்.