விஹாரகல பகுதியில் இன்று (ஏப்ரல் 19) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, பெரகல – வெல்லவாய பிரதான வீதி போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலை முடக்கப்பட்டுள்ளதால், அந்த வழியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்றுப் பாதைகளைத் தேடி பயணிக்க வேண்டியுள்ளது. மாற்று பாதையாக எல்ல – வெல்லவாய வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடைபட்ட சாலையில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.