கிளிநொச்சி மருதநகர் பகுதியில் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்று (22) உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, எரிவாயு சிலிண்டர் ஒன்று கசிந்து தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பெண்ணின் ஆடையில் தீப்பற்றியதால், அவர் பலத்த தீக்காயங்களுடன் கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அவரது உயிர் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. உயிரிழந்தவர் 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

