களுத்துறை பகுதியில் இயங்கும் ஒரு குற்றவியல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் 9MM துப்பாக்கி, ஒரு மகசின், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் களுத்துறை கிதுலாவ பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், களுத்துறை நாகொட பகுதியில் சோதனை நடத்தி, ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை மீட்கப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் பின்னர் பிணையில் விடுதலையானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.