இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் வெறித்தனமாக சுற்றித் திரியும் நாய்கள் அதிகரித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலைமை குறித்து சபாநாயகர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் நாய்கள் அடிக்கடி நுழைந்து சுதந்திரமாக நடமாடுவதாகவும், இதன் காரணமாக பாதுகாப்பு மீறல் ஏற்படக்கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் சுத்தம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.