இலங்கையில் பேராதனை பகுதியில் காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், மற்றும் வேட்டைக்கான பல்வேறு உபகரணங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் யஹலதென்ன பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.