யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிக அளவில் நுகர்ந்ததினால் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று (25.03.2025) இரவு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். உயிரிழந்த இளைஞனுடன் இணைந்து போதைப்பொருளைப் பயன்படுத்திய மற்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் சமூக அமைப்புகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.