யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 8ஆம் கட்டை, மல்லாகம் பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய யுவதி ஒருவர், நேற்றிரவு திடீரென மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, குறித்த யுவதி நேற்று இரவு உணவுச் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதும், அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், மரணத்திற்கான காரணம் தெளிவுபடுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், யுவதியின் இதயம் திடீரென செயலிழந்தது மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த யுவதிக்கு ஏற்கனவே இதய சம்பந்தப்பட்ட உடல்நிலை பிரச்சினைகள் இருந்ததா என்பது தொடர்பிலும், மரணத்திற்கு ஏதேனும் வேறு காரணங்கள் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திடீர் மரணம், யாழ் மக்களிடையே கவலைக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.