யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை மாலை வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு ஆழியவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்று கலந்துரையாடிய போது, இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் முதலில் மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.