இத்தாலியில் தொழில் செய்து வந்த பெண் ஒருவர், கனவில் வந்த தந்தையின் ரகசியத் தகவலை நம்பி புதையல் தோண்ட நாடுகடந்த நிலையிலிருந்து இலங்கைக்கு வந்த சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனவின் பின்னணி…பொலிஸார் தெரிவித்ததாவது, கடந்த மே 19ஆம் திகதி, சிலாபம் மாதம்பை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, மரணித்த தந்தை தனது மகளின் கனவில் வந்து ஒரு புதையல் இருப்பதை தெரிவித்ததாக பெண் கூறியுள்ளார்.
தந்தையின் கனவில் கூறிய இடத்தில் புதையல் இருப்பதாக நம்பி, அந்த இடத்தில் புதையல் தோண்டுவதற்காக பல்வேறு உபகரணங்களை கொண்டு வந்துள்ளனர். இவ்வபரணங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்புத் தகவல்களுக்கமைய, இத்தாலியில் தொழிலில் ஈடுபட்டிருந்த அந்த பெண், தந்தையின் கனவின் மீது நம்பிக்கை வைத்து, குறிப்பிட்ட இடத்தில் புதையல் தோண்டவே இலங்கைக்கு வந்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரும், சந்தேகநபர்களாக ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நாட்டில் புதையல் நம்பிக்கைகள், கனவுகளில் அடங்கிய விசித்திர நம்பிக்கைகள் மற்றும் அதனைச் சார்ந்த சட்டவிரோத செயல்கள் குறித்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.