சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கையை ட்வீட் செய்தி ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது.
அத்துடன் பொது நிதி மேலாண்மை மற்றும் ஏற்றுமதி தொழில்கள் உட்பட பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றில் தொடர்ந்தும் இலங்கையுடன் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது