தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீம் – 9 மாதங்கள் காத்திருக்க வேண்டுமாம்!
அமெரிக்காவின் பிரபல Frida பிராண்டு, தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது உண்மையான தாய்ப்பாலில் இருந்து தயாரிக்கப்படவில்லை, ஆனால் தாய்ப்பாலின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
கால்சியம், இரும்பு, வைட்டமின் B & D ஆகியவை நிறைந்துள்ளன.,இனிப்பு மற்றும் உவர்ப்பு சுவை கலந்த புதிய அனுபவம்.
9 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவியதும், பலரும் வியப்பு, ஆர்வம், கேலி மற்றும் விமர்சனங்களுடன் கலவையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.