மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே இயந்திர அறையினுள் மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்ட திடீர் தீப் பரவலினால் எக்ஸ்ரே இயந்திரத்தின் உப இயந்திரங்கள் மற்றும் கணினி தொகுதி உட்பட பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியும் முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளது.
இந்நிலையில் தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

