மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின் படி, பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன Colt MK18 1 M203 இயந்திரத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பிள்ளையானை கைது செய்தபோது, அந்த அலுவலகத்தில் இருந்து இந்த துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை விலையுயர்ந்த அமெரிக்க தயாரிப்பான M-16 வகையைச் சேர்ந்தவையாகும், மேலும் M203 கிரனேட் ஏவிகள் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த ஆயுதங்கள் ஆகும்.
இந்த வகை துப்பாக்கிகள் இலங்கையின் விசேட அதிரடிப் படையில் கூட மிகவும் சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சி அலுவலகத்தில் இத்தகைய ஆயுதங்கள் இருப்பது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தொடர்ந்த விசாரணைகளில், இந்த ஆயுதங்கள் முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வழங்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்த இரண்டு துப்பாக்கிகளும் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

