க.பொ.த சாதாரண தரம் (O/L) எழுதிவிட்டு வீடு திரும்பிய 16 வயது பாடசாலை மாணவன், மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்று கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவன் கடந்த செவ்வாய்க்கிழமை (25) பரீட்சையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.தன்னுடைய கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யும் நிலையில், அழைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது.மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாணவனின் சடலம் புதன்கிழமை (26) கேகாலை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், மின்னல் தாக்குதலின்போது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் ஆபத்துகள் குறித்து மக்களுக்கு மீண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.மின்னல் அடிக்கும்போது கையடக்கத் தொலைபேசி, மின் சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது பாதுகாப்பிற்காக அவசியமாகும்.