30வயதுடைய ஒருவரின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.!!!
கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது இன்று செவ்வாய்க்கிழமை காலை Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது Marne ஆற்றில் பொதி ஒன்று மிதந்து வருவதை கண்ட ஒருவர் அதனை இழுத்து எடுக்க முற்பட்டுள்ளார் ஆனால் அது வெறுமனே பொதி மட்டுமில்லை.
அது ஒரு சடலம் என தெரியவந்துள்ளது பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர் 30 வயதுடைய ஒருவரின் சடலம் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடல் வீங்கிய நிலையில் மீட்கப்பட்டது இது தொடர்பான விசாரணைகளை Créteil நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.