நுகேகொடை நகரத்தில் இன்று (28) பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இன்று (28) பிற்பகல் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தொடர் தீ விபத்துக்கள் நிகழ்வது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.