இலங்கையின் பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற சமோத் கவிஷ்க பிரேமரத்ன வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை இனந்தெரியாத நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (18) அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமோத் கவிஷ்க பிரேமரத்னவுக்கு சொந்தமான அநுராதபுரம், குருந்தன்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் கவரக்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.