இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணத் கட்டணங்களை வங்கி அட்டை மற்றும் QR குறியீடுகள் மூலம் செலுத்தும் புதிய முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இந்த முன்னோடி திட்டம் முதலில் கொட்டாவ மற்றும் கடவத்தை இடையே செயல்படுத்தப்படவுள்ளது. இதில், பயணிகள் தங்களுடைய டெபிட் அட்டை, கடன் அட்டை, மற்றும் QR குறியீடு முறைகளை பயன்படுத்தி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணத்திற்கு தேவையான கட்டணத்தை செலுத்த முடியும்.
மேலும், மே மாதம் முதல் நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இந்த வங்கி அட்டை மூலம் கட்டண செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.