உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக, எதிர்வரும் 2025 மே 6 மற்றும் 7ஆம் திகதிகளில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தப்படும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, நாடு முழுவதும் உள்ள ஆட்பதிவுத் திணைக்கள அலுவலகங்களில் எந்தவொரு பொதுச் சேவைகளும் வழங்கப்படமாட்டாது என்பதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இடைநிறுத்தம் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊழியர்களின் பங்கேற்பை கருதி மேற்கொள்ளப்படுவதாகவும், தேர்தலுக்குப் பிறகு வழமையான சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

