114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று (07) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற நடைமுறைக்குப் பிறகு, ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இவ்விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
தபால் வாக்குச்சீட்டுகள் விநியோக நடவடிக்கைகள் தொடர்பாக வெளியான அறிவிப்பில், தபால்மா அதிபர், பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய பொதிகளைப் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகம் இன்று பிற்பகல் அல்லது நாளை (08) ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதை அரசாங்க அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளது.