அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு காரணமாக, இலங்கை ரூபாவின் பெறுமதி குறையும் அபாயம் நிலவுவதாக நாணய பரிமாற்றத் துறையினர் எச்சரிக்கின்றனர்.
கடந்த வாரம், ட்ரம்ப் 44% பரஸ்பர தீர்வையை இலங்கையின் மீது விதிப்பதாக அறிவித்தார்.தற்போது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக இலங்கை 88% தீர்வையை செலுத்தி வருகிறது.புதிய வரி விதிப்பின் கீழ், இலங்கையின் பொருளாதாரத்தின் மீது பெரும் அழுத்தம் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.இலங்கையின் வர்த்தக இடைவெளி (trade deficit) இந்தியா மற்றும் சீனாவை விட அதிகமாக விரிந்திருப்பதால், நாட்டின் டொலர் வருவாய் மேலும் குறையும் அபாயம் உள்ளது.
இதனால், ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடையும் என நாணய பரிமாற்றத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.அமெரிக்காவுடன் நிலைதிருத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்தா தெரிவித்ததின்படி, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஒரு யோசனைத் திட்டம் நாளை முன்வைக்கப்படும்.இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் இணையவழியில் கலந்துரையாடியுள்ளனர். அமெரிக்காவின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த யோசனைத் திட்டம் உருவாக்கப்பட்டு, இலங்கையின் இறக்குமதி வரி கட்டமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.