யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று (27) காலை பெரும்தொகை கஞ்சா போதைப்பொருள் இராணுவ புலனாய்வு பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.பாழடைந்த வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 75 கிலோ கிராமுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.கைபற்றப்பட்ட போதைப்பொருள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்படும்.சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது வல்வெட்டித்துறை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த போதைப்பொருள் யார் வசம் இருந்து கொண்டு வரப்பட்டது, இதில் யார் தொடர்புபட்டுள்ளனர் என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.