இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலியின் தாக்கத்தைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவர் கூறியது:”டிக்டொக் செயலி முதலில் சிறந்த நோக்கத்துடன் தொடங்கப்பட்டிருந்தாலும், இப்போது அதன் தீமைகள் அதிகரித்துள்ளன. பலர் தங்களின் உண்மையான முகங்களை இத்தலத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர்.””புலம்பெயர் தமிழ் மக்களுடன் தொடர்பை பேணுவது காலத்தின் தேவை. டிக்டொக் போன்ற தளங்கள் தங்கள் முதன்மை நோக்கத்தையே பின்பற்ற வேண்டும்.”
அதனைத் தொடர்ந்து, புலம்பெயர் தமிழர்களுடன் நேரடி உரையாடலுக்கான புதிய திட்டத்தை அறிவித்தார்: வாரத்தில் மூன்று நாட்கள் (திங்கள், புதன், சனி) மற்றும் தேவையின் பேரில் கூடுதல் நாட்களில், ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் நேரடி உரையாடல் ஏற்பாடு. முன்கூட்டியே தொடர்பு கொண்டு, அடையாளம் தெரிவித்து உரையாட வேண்டும். முறையற்ற வார்த்தைகள் பயன்படுத்தும் நபர்களுடன் உரையாடல் உடனடியாக நிறைவடையும் என எச்சரிக்கை.
இந்த புதிய முயற்சி, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தாயகத்தமிழர்களுக்கிடையில் உறவை வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.