ஸ்ரீ தலதா வழிபாட்டிற்காக பக்தர்கள் கணிசமாக திரண்டுள்ளதால், தற்போது புதியவர்களை இணைத்துக்கொள்ள முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த சில நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ள நிலையில், தலதா வழிபாட்டுக் குழு மற்றும் பொலிஸார் பொதுமக்களுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய வரிசையில் ஏற்கனவே உள்ள சுமார் 4இலட்சம் பக்தர்கள் வழிபாடு செய்யும் நிலை உருவாகியுள்ளது. அவர்களுக்கு வழிபட வாய்ப்பு வழங்கப்படும் என்ற நிலையில், வரிசையில் இல்லாதவர்கள் தற்போது கண்டியை நோக்கி பயணிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று (25.04.2025) வழிபாடு 8வது நாளாக காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. வரிசையில் உள்ளவர்களுக்கு வழிபாடு நிறைவு செய்ய 27 ஆம் திகதி மாலை வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழிபாட்டிற்கான அடுத்த கட்ட அனுமதி குறித்து, 26 ஆம் திகதி மாலை அல்லது 27 ஆம் திகதி காலை அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.