இலங்கையில் தொடருந்து மூலம் சரக்கு போக்குவரத்து 70% இருந்து 30% ஆகக் குறைந்துள்ளதாக தொடருந்து கண்காணிப்பாளரும் தொடருந்து நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தொடருந்து துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறைபாடுகளை சரிசெய்வதன் மூலம் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சரக்கு போக்குவரத்திற்காக ஒரே ஒரு தொடருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும், பயணிகள் தொடருந்துகளுடன் இணைந்து ஐந்து தொடருந்துகள் சரக்கு சேவைக்கு பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சரக்கு போக்குவரத்து வீழ்ச்சியடைந்ததற்கு முக்கிய காரணம் ரயில் என்ஜின்கள் இல்லாததுதான் என்றும், பழுதடைந்த ரயில் என்ஜின்களை பழுதுபார்த்து சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.