இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் ஒருநாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் நண்பகல் 12 மணிவரை மட்டுமே வழங்கப்படும்.
மேலும், 24 மணி நேர ஒருநாள் கடவுச்சீட்டு சேவை இந்த நாள்களில் இயங்காது என்பதையும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தைய விடுமுறைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

