கடலோர தொடருந்து பாதையில் தண்டவாளம் உடைந்ததால் தொடருந்து போக்குவரத்து தாமதமாகியுள்ளது.
வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு அருகில் கடலோர தொடருந்து தண்டவாளம் உடைந்ததால் தொடருந்து சேவை தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, அந்த நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து தொடருந்துகளும் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.