ஹொரணை கிரிகல பிரதேசத்தில் மர்மமான முறையில் வீட்டின் அறையொன்றில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் செனசும் பியஸ, கிரிகல, ஹொரணை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் எனத் தெரியவந்துள்ளது.
வீட்டில் அறையொன்றில் தனியாக இருந்த போதே இந்த பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தனது தாய் இருந்த அறையில் கதவு மூடமுடியாத நிலையில் காணப்பட்டதாகவும், தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் மகள் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
சம்பவம்குறித்து ஹொரணை தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.