உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யப்படையினர், காபி கப்களுக்குள் கையெறிகுண்டுகளை வைத்து அவற்றை ட்ரோன்கள் மூலம் வீசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ஆயுதப்பற்றாக்குறையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த அதிநவீன கருவிகள் இல்லாத நிலையில் ரஷ்யா இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
எனினும் அது குறித்து உறுதியாக தெரியவில்லை. கிழக்கு உக்ரைனிலுள்ள Marinka என்ற நகரில், உக்ரைன் வீரர்கள் இரண்டு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியபோது இந்த உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது.
இதன்போது காபி கப்களுக்குள் கையெறிகுண்டுகளை வைத்து, அவற்றை நூலால் கட்டி, அதை ட்ரோனுடன் இணைத்து ரஷ்யப்படையினர் பறக்கவிட்டுள்ளனர் .
எனினும் , அதிர்ஷ்டவசமாகக அந்த குண்டுகள் வெடிக்கவில்லை. ஏனெனில் இந்த குறிப்பிட்ட வகை ட்ரோன்களால் அதிக உயரம் பறக்க முடியாது.
எனவே அவற்றை எங்களால் எளிதில் சுட்டு வீழ்த்திவிடமுடியும் என உக்ரைன் வீரர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.