இலங்கை மீதான ஈஸ்டர் தாக்குதல் குறித்து பிரித்தானிய Channel 4 வழங்கிய அறிக்கை நிகழ்ச்சியில் அம்பலப்படுத்திய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவர்களை கைது செய்து விசாரணை நடத்தாமல் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நீதி கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை சர்வதேச தலையீட்டின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.