கனடாவில் வசிக்கும் தமிழர்களால் பிராம்ப்டன் நகரில் திறக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒன்றை பற்றி சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன. இந்த நினைவுச்சின்னத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் (LTTE) தமிழீழ வரைபடம் இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவுச்சின்னம், 2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் மற்றும் இலங்கையின் தமிழர் அமைப்புகள் என்பவற்றின் ஆதரவுடன், இந்த நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் பிரதி அமைச்சரான விஜே தணிகாசலம், யாழ்ப்பாணத்தில் பிறந்தவர், நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுச்சின்னத்தை திறந்து வைத்ததாக சமூக ஊடக வீடியோக்களில் தெரிய வருகிறது.
இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இந்த நினைவுச்சின்னத்தை தொடர்பாக அறிக்கை வெளியிடுமாறு வெளிவிவகார அமைச்சு எதிர்பார்க்கின்றது.

