காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுத்திவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்செயல்களை கட்டுப்படுத்த, காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.