பதுளை – மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொபெரிய பகுதியில் குறும்பதகராறு கத்திக்குத்த்தில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தந்தை ஒருவர் தனது மகளையும், மனைவியையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய பின் தனது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவர் ரொபெரிய பகுதியில் வசிக்கும் 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த தாயும், மகளும் நேற்று இரவு ரொபெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.