உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் இறுதியாக ஐபோன் 15 வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் 15 வெளியீட்டு நிகழ்வு: அடுத்த தலைமுறை ஐபோன் 15 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 12-ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், இந்த நிகழ்வு இரவு 10:30 மணிக்கு நடைபெறும்.
ஐபோன்கள் இந்த ஆண்டு பல பகுதிகளில் பாரிய மேம்படுத்தல்களைப் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், வடிவமைப்பு பெரிதாக மாறாமல் இருக்கலாம்.
இதுவரை கசிந்துள்ள தகவல்களின்படி, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலையை பாரிய அளவில் உயர்த்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
ஸ்டாண்டர்டு மற்றும் பிளஸ் வேரியண்ட் போன்கள் பழய விலையில் கிடைக்கலாம். இருப்பினும், இதைப் பற்றி மேலும் அறிய சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
ஆப்பிள் 2023 ஐபோன்களின் விலையில் அனைவரும் ஆர்வமாக உள்ளனர். வரவிருக்கும் ஐபோன் 15 வரிசையானது சில அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் ஐபோன் 15 நிகழ்வில் ஸ்மார்ட்போன்கள் தவிர மற்ற தயாரிப்புகளை ஆப்பிள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9-ன் புதிய தொகுப்பை வெளியிடுகிறது. இது தற்போதைய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8-லிருந்து மேம்படுத்தப்பட்டதாக இருக்கும். புதுப்பிக்கப்பட்ட பதிப்பையும் (ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா) பெறலாம். ஆப்பிள் S9 அப்ளிகேஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் M3 செயலியுடன் கூடிய புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக்க கூறப்படுகிறது.

