ரம்பொடை – கெரண்டி எல்லையில், பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் சேர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விபத்து காரணங்கள் மற்றும் அதற்கான அடிப்படை அம்சங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் இறந்துபோகும் விபத்துக்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சிறப்பான யோசனைகள் சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

