ராஜகிரிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள பத்தரமுல்லா பகுதியில், பொரளை நோக்கி செல்லும் லொறியொன்று பாதசாரி கடவையில் சென்று கொண்டிருந்த 59 வயதான பெண்ணை மோதியது. அதில் பலத்த காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
விபத்துக்கான காரணமாக, லொறி சாரதி தப்பிச் சென்றுள்ளார். சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் வெலிக்கடை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இப்பெண்ணின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

