மகளை கல்வி நிலையத்திற்குச் செல்வதற்காக நடந்து சென்ற 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மகேந்திரா ரக வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்தவர்.மகளை கல்வி நிலையத்திற்குச் செலுத்திக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மகேந்திரா வாகனம் அவர் மீது மோதியது.சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்துள்ளார்.
வாகனத்தின் சாரதி முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.படுகாயமடைந்த பெண், முதலில் முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று குழந்தைகளும் தாயின் மரணத்தால் நிர்கதியாக உள்ளனர்.சம்பவம் குறித்து முழங்காவில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் யாழ்ப்பாணம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.