ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த குருசாமி கணேசலிங்கம் (வயது 45) என்பவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது அரச பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் கடந்த 22 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஊர்காவற்துறை – பாலக்காட்டு சந்தியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வீதியை கடந்த அவர் மீது வேகமாக வந்த பேருந்து மோதியதில் படுகாயமடைந்தார்.
தகவல் கிடைத்தவுடன் அவரை உடனடியாக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (25.03.2025) காலை 8.00 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.