ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இலங்கையில் மீண்டும் கோவிட் பரவல் ஆபத்தான நிலையை எட்டி வரும் தற்போதைய சூழ்நிலையில் நாடு தழுவிய முடக்கலை அமுல்படுத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே கோவிட் பரவலின் தற்போதைய நிலைமைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி தலைமையில் இன்று ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
கோவிட் – 19 தொற்றுக்கு இலக்காகும் நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் என்பவை தொடர்பில் ஆராய்ந்து இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் நாடு தழுவிய முடக்கத்தை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென இராணுவ தளபதி ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்பதால், முடக்கத்தை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.