சுன்னாகம் சந்தை, காங்கேசந்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த ஒரு முக்கியமான சந்தையாகும். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் விளைந்த வேளாண் பொருட்கள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்துநான்காம் ஆண்டு, மார்ச் மாதம் இருபத்தெட்டாம் தேதி, புதன்கிழமை காலை, தாங்கிகளிலும் இராணுவ வாகனங்களிலும் வந்த இலங்கை ஆயுதப்படையினர், சந்தையில் கூடியிருந்த பொதுமக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் பத்து பொதுமக்கள் உயிரிழந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, சந்தைப் பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பின்னர், காங்கேசந்துறை வீதியூடாக மல்லாகம் மற்றும் தெல்லிப்பழை நோக்கிச் சென்ற படையினர், வழியெங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், தெல்லிப்பழையைச் சேர்ந்த இருபத்தாறு பாடசாலை மாணவர்கள் உட்பட பல பொதுமக்கள் காயமடைந்தனர்.
சுன்னாகம் சந்தைப் படுகொலை, வட இலங்கையின் பொதுமக்கள் எதிர்கொண்ட வன்முறைகளில் ஒன்றாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.
சுன்னாகம் சந்தை, காங்கேசந்துறை வீதியில் 10 பொதுமக்கள் உயிரிழந்தனர்
No Comments1 Min Read

