சகலருக்குமான நாளாந்த அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனியார் நிறுவனங்கள் மாத்திரம் இன்றி அரச பெருந்தோட்ட நிறுவனங்களிலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஆயிரம் ரூபா வேதனம் செலுத்தப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில தனியார் நிறுவனங்களில் மாத்திரம் நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்ற போதிலும் நீதிமன்றிற்கு சென்றுள்ள நிறுவனங்கள் ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்குவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படுகின்ற 500 ரூபா என்ற நாளாந்த அடிப்படை வேதனத்திற்கு பதிலாக ஆயிரம் ரூபா அடிப்படை வேதனம் என்ற சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் சகல நிறுவனங்களும் அந்த தொகையை வழங்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்கூலிகளுக்கு வழங்கப்படும் வேதனம் வாழ்க்கைச்செலவுக்கு போதுமானதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்