சிறைக் கைதிகள் மூவர், 2வயது ஆண் குழந்தை உட்பட 12 சிறுவர்களுடன் வவுனியா மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று (ஓகஸ்ட்-04) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறைக் கைதிகள் 23 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களில் மூவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் 28, 29, 43 வயது ஆண் கைதிகளாவர்.
அத்துடன், வவுனியாவில் இருந்து பெறப்பட்டிருந்த 116 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் மேலும் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 11 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
2, 6, 6, 7, 10, 10,11, 12, 12, 14, 18, 18 வயதுடைய சிறுவர்கள் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ]
அவர்களுடன், 19, 19, 25, 26, 29, 32, 42, 44, 52, 65 வயதுடையவர்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.